திருப்பதியில் ஹிந்து அல்லாத பிற மத நடவடிக்கை; 18 ஊழியர்கள் மீது நடவடிக்கை..!
Seithipunal Tamil February 06, 2025 07:48 AM

பி.ஆர்.நாயுடு தலைமையிலான திருப்பதி தேவஸ்தான வாரியம், ஹிந்து ஊழியர்கள் மட்டுமே இங்க பணியாற்ற முடியும் என்று முன்பு கூறியிருந்தது.  இந்நிலையில், ஹிந்து அல்லாத பிற மத நடவடிக்கைகளை 18 ஊழியர்கள் மேற்கொண்டதற்காக, அவர்கள் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த 18 ஊழியர்கள் ஹிந்து அல்லாத மரபுகளைப் பின்பற்றுவது கண்டறியப்பட்டது. இதனடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து திருப்பதி தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளதாவது:

'எங்கள் வாரியத்தின் தீர்மானத்தின்படி, கோவில்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் உள்ள இந்த 18 பேர், தற்போதைய பணிகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.

ஊழியர்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. அரசுத் துறைகளுக்கு மாற்றுதல் அல்லது தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் ஆகிய வாய்ப்புகள் வழங்கப்படும்.

1989-ஆம் ஆண்டு அறக்கட்டளைச் சட்டத்தின்படி, திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ஹிந்து பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாஜக தலைவரும் தேவஸ்தான வாரிய உறுப்பினருமான பானு பிரகாஷ் ரெட்டி இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளார் என்பற்றது குறிப்பிடத்தக்கது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.