விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ஜெயக்குமார், சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உதயகுமார்(30) என்ற மகன் உள்ளார். இவர் BE பட்டதாரி ஆவர். இவர் தனது படிப்பை முடித்த பின் ஸ்லோவேக்கியா நாட்டிலுள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அனஸ்டாசியா என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 30ம் தேதி இருவரும் ஸ்லோவேக்கியாவிலிருந்து விழுப்புரம் வந்தடைந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 3-ம் தேதி அன்று பெருமாள் கோவிலில் வைத்து தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.