“ரூ.500 கோடி சொத்து”… டிராவல்ஸ் அதிபருக்கு எழுதி வைத்த ரத்தன் டாடா… ஏன் தெரியுமா..?
SeithiSolai Tamil February 07, 2025 11:48 PM

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. இதை தன்னுடைய சகோதரர் ஜிம்மி டாடா மற்றும் தனது தாயின் மறுமணத்தின் மூலம் பிறந்த சகோதரிகளான ஷிரீன், டீன்னா ஆகியோருக்கு அவர் உயில் எழுதி வைத்துள்ளார். இந்நிலையில் அவரது சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை, அவரது தொழில் முறை பங்குதாரரான மோகினி மோகன் தத்தா என்பவருக்கு எழுதி வைத்துள்ளார். இந்த சொத்துக்களின் மதிப்பு 500 கோடி இருக்கும். இது ரத்தம் டாடாவின் குடும்பத்தினருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மோகினி மோகன் தத்தா(80) ஜாம்ஷெட் பூரைச் சேர்ந்த டிராவலர்ஸ் அதிபர் ஆவர். இவர் கடந்த 1960 ஆம் ஆண்டு ரத்தன் டாடாவை சந்தித்தார். அப்போது அவர்களுக்கு இடையே நட்பு உருவானது. அப்போது தத்தாவிற்கு 24 வயது இருக்கும். இவர் சொந்தமாக டிராவல் ஏஜென்சி நிறுவனத்தை தொடங்கினார். ரத்தன் டாடாவும், தத்தாவும் ஒரு வணிக பங்குதாரர் என்பதைவிட மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இவர் ரத்தன் டாட்டாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்துள்ளார். கிட்டத்தட்ட டாடாவின் வளர்ப்பு மகன் போலவே நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால் ரத்தன் டாடா சட்டபூர்வமாக யாரையும் தத்தெடுக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.