சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் வீடியோவில், இளைஞர்கள் பலரும் சேர்ந்து தெருநாய்க்கு பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அதாவது இளைஞர்கள் ஒரு காரில் தெரு நாய் ஒன்றுக்கு மலர் மாலைகள் அணிவித்து அழைத்து வருகின்றனர். பின்னர் காரின் பேனட் மீது நாயை அமர வைத்து, அதன் முன்பு கேக் வைத்து வெட்டுகின்றனர்.
அந்த காரை பின் தொடர்ந்த வந்த மற்றொரு காரில் இருப்பவர்கள் ஆரவாரம் செய்து அவர்களுடன் சேர்ந்து தெருநாயின் பிறந்த நாளை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடுகின்றனர். அதன் பின் தெரு நாய் மீது மலர்களையும் தூவுகின்றனர். இறுதியில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த இளைஞர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி, லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதற்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram