முதல் சுற்று நிறைவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 6880 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
திமுக சந்திரகுமார் - 7961 வாக்குகள்
நாம் தமிழர் சீதாலட்சுமி - 1081 வாக்குகள்
ஈரோடு கிழக்கு தொகுதி முன்னிலை நிலவரம்..!முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரசேகர் 4260 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
திமுக சந்திரசேகர் - 5211 வாக்குகள்
நாம் தமிழர் சீதாலட்சுமி - 951 வாக்குகள்
தபால் வாக்குகளில் திமுக முன்னிலைஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளரை உள்ளே விடவில்லை என்று சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் திமுக அதில் முன்னிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு :முன்னணி நிலவரம் திமுக - 5211 நாம் தமிழர் - 951 ஈரோடு கிழக்கு: தொடங்கும் வாக்கு எண்ணிக்கைஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடந்தது. இதில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2021-ல் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கடந்தாண்டு டிசம்பரில் உயிரிழந்ததைத்தொடர்த்து, அத்தொகுதி காலியானது. பின்னர், பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் விலகுவதாக அறிவித்தன. இதனால், பிரதான காட்சிகளாக தி.மு.க-வும், நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்கின.
2011-ல் இதே தொகுதியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு வென்ற சந்திரகுமாரை வேட்பாளராக தி.மு.க களமிறக்க, சீதாலட்சுமி என்பவரை நா.த.க வேட்பாளராக நிறுத்தியது. பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மொத்தமாக, 67.97 சதவிகித வாக்குகள் பதிவாகின. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இதுவொரு சிறிய முன்னோட்டமாக இருப்பதால், இந்த தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், நாளை காலை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருக்கிறது.