களத்தில் இறங்கிய ஸ்டாலின்..! ஒவ்வொரு மாநிலத்திற்கும் செல்லும் தமிழக அமைச்சர்கள் குழு.!
Top Tamil News March 12, 2025 10:48 AM

கடந்த மார்ச் 5ஆம் தேதி தமிழக அரசு சார்பாக 58 அரசியல் கட்சிகள் பங்கேற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் படிதொகுதி மறு வரையால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து தொகுதி மறுவரையால் பாதிக்கப்படும் 7  மாநிலங்கள் சேர்ந்த முதலமைச்சர்கள் அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அப்போது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முதல் கூட்டம் மார்ச் 22ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அமைச்சர்கள் கொண்ட குழு அந்த ஏழு மாநிலங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சந்தித்து 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் வழங்க உள்ளனர், இதன் முதல் கட்டமாக ஒடிசா சென்ற தொழில் துறை அமைச்சர் மற்றும நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்ற நவீன் பட்நாயக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். 

இதனையடுத்து வருகிற 12 ஆம் தேதி வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா  கர்நாடகாவுக்கும், 13 ஆம் தேதி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் என் ஆர் இளங்கோ தெலுங்கானா மாநிலத்திற்கும் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.