பெரும் பரபரப்பு... நாதக வேட்பாளர் சீதாலட்சுமி போலீசுடன் வாக்குவாதம்!
Dinamaalai February 08, 2025 02:48 PM

 ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில்  போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் இவரும் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் காலமானார்.

 இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி நிலவியது. அதிமுக உட்பட மற்ற  கட்சிகள் போட்டியிடவில்லை.அதன்படி திமுக வேட்பாளராக விசி சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமியும் போட்டியிட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன்படி காலை 8:00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.  

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சியின் ஏஜெண்டுகளை உள்ளே அனுமதிக்கவில்லை என கூறி  சீதாலட்சுமி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.