முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும், அதன் பின் 30 நிமிடங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணத் தொடங்கப்படும்.டெல்லி சட்டமன்ற தேர்தலில் 1.55 கோடி தகுதியுள்ள வாக்காளர்கள் மூலம் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 46 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல முதற்கட்ட தலைவர்கள் பின்னடைவை சந்தித்த நிலையில், பாஜகவின் முக்கிய தலைவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். அதன்படி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து முதல்வர் அதிஷியும் பின்னடைவை சந்தித்துள்ளார். கல்காஜி தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் பிதுரி முன்னிலை வகிக்கிறார். அதேபோல், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியாவும் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காலை 8.45 மணி நிலவரப்படி, முன்னிலை நிலவரம்:
பாஜக– 46
ஆம் ஆத்மி – 26
காங்கிரஸ் – 1
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ நிலவரங்களின் படி, டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 6 இடங்களிலும் முன்னிலை வகிக்க, ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது..