ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
Top Tamil News February 08, 2025 02:48 PM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.  இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 05ம் தேதி நடைபெற்றது. அதிமுக, பாஜக, தேமுதிக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தன. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களையும் சேர்த்து இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கருத்துகணிப்புகளின் படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் இந்த இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.