டெல்லி யாருக்கு…? இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை… நாடே எதிர்பார்ப்பு…!!
SeithiSolai Tamil February 08, 2025 02:48 PM

தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுடெல்லி சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி மாற்றும் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இங்கு கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 60.42 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்படும். டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 தொகுதிகளை வெல்ல வேண்டும். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் நண்பகல் 12 மணிக்கு வெற்றி மற்றும் வாக்குகளின் முன்னிலை விவரங்கள் வெளியாகும். மேலும் நாடே எதிர்பார்க்கும் தலைநகர் டெல்லியில் யார் ஆட்சி அமைக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு பெரிய அளவில் எழுந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.