ஒருமை, பன்மையே தெரியாத அண்ணாமலை எப்படிதான் ஐபிஎஸ் படித்தாரோ?- அமைச்சர் ரகுபதி
Top Tamil News February 21, 2025 03:48 AM

பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உண்மையான பாதுகாப்பு தற்போது தான் கிடைத்துள்ளது. முன்பெல்லாம் புகார் கொடுக்க மனைவிகள் முன் வர மாட்டார்கள். ஆனால் தற்போது மாணவிகளுக்கு உள்ள அச்ச உணர்வை போக்கும் நிலையை அரசு உருவாக்கியுள்ளது. இதை அண்ணாமலையாலும் எடப்பாடி பழனிச்சாமி ஆளும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “திருமயம் சட்டமன்ற தொகுதியில் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதுகாக்கப்படுகிறது என்பதற்கு அரிமளம் அருகே உள்ள பள்ளியில் பாலியல் குற்றம் சாட்டு மாணவர்கள் கூறிய உடனே உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டதே சாட்சி. இதை விட விரைந்து அரசு செயல்பட முடியாது. இந்த ஆட்சியில் தைரியம் இருந்த காரணத்தினால் தான் மாணவிகள் தைரியமாக புகார் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். இந்த அரசு பெண்களுக்கு தைரியத்தையும் பாதுகாப்பையும் வழங்கி உள்ளது. இதேபோல் ஒரு குற்றம் உத்தரபிரதேசம் போன்ற மாநிலத்தில் நடைபெற்ற இருந்த பெண்கள் புகார் கொடுக்கவே வந்திருக்க மாட்டார்கள். ஒருவரை பழிவாங்கும் நோக்கத்திற்கு அரசு துணை நிற்காது குறைந்தபட்சம் உண்மை இருந்தால் தான் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். 

பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உண்மையான பாதுகாப்பு தற்போது தான் கிடைத்துள்ளது. முன்பெல்லாம் புகார் கொடுக்க மனைவிகள் முன் வர மாட்டார்கள். புகார் கொடுத்தால் மதிப்பினை ஆசிரியர்கள் குறைத்து விடுவார் என்று. ஆனால் தற்போது மாணவிகளுக்கு உள்ள அச்ச உணர்வை போக்கும் நிலையை அரசு உருவாக்கியுள்ளது. இதை அண்ணாமலையாலும் எடப்பாடி பழனிச்சாமி ஆளும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அண்ணாமலை இங்கே அறிவுரை கூறுபவர் மகாராஷ்டிராவில் உத்தர பிரதேசத்தில் கூற வேண்டும். அதிமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை. பொள்ளாச்சியில் நடந்த குற்றத்திற்கு கூட 20 நாள் கழித்து தான் வழக்கு பதிவு செய்தார்கள். அதனால் அதிமுக ஆட்சியில் புகார் கொடுக்க கூட முன்வரவில்லை யாரும். அண்ணாமலைக்கு ஒருமை பன்மை எதுவும் கிடையாது. ஐபிஎஸ் எப்படி படித்தார் என்பது அவருக்குத்தான் தெரியும்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.