இரவு தூங்கச் செல்லும்முன் வெதுவெதுப்பான பாலை குடித்து விட்டு தூங்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது.அதேபோல இரவில் குடிக்கும் பாலில் ஊறவைத்த உலர் திராட்சை சேர்த்து குடிப்பதும் உடலில் பல அற்புதங்களைக் கொண்டு வரும்.
கிஷ்மிஷ் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக அவற்றில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம்.அது பாலில் ஊறவைக்கும்போது கூடுதலாக பால், புரதங்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை இணைந்து கிடைக்கும். இவை இணையும்பேர்து அது ஊட்டச்சத்துக்களின் பவர்ஹவுஸாக மாறும்.
ஊறவைத்த கிஷ்மிஷ் பாலை குடிப்பதன் முதல் பயனே அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் உடலில் உண்டாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது.இதனால் உங்களுடைய நோயெதிர்ப்பு மண்டலம் உடலில் நோய்த்தொற்றுக்கள் பரவாமல் எதிர்த்துப் போராடும் வேலையைச் செய்யும்.
உலர் திராட்சையில் இயற்கையாகவே லேக்ஸேட்டிவ் பண்புகள் இருக்கின்றன. இது ஜீரண ஆற்றலை மேம்படுத்தும். இதை பாலில் ஊறவைக்கும் போது அவற்றின் ஆற்றல் இன்னும் அதிகரிக்கும்.இது குடல் இயக்கத்தை மேம்படுத்துவதோடு குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். உலர் திராட்சையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்து ஒட்டுமொத்த ஜீரண ஆற்றலையும் மேம்படுத்தும்.
உலர் திராட்சையில் இயற்கையாகவே லேக்ஸேட்டிவ் பண்புகள் இருக்கின்றன. இது ஜீரண ஆற்றலை மேம்படுத்தும். இதை பாலில் ஊறவைக்கும் போது அவற்றின் ஆற்றல் இன்னும் அதிகரிக்கும்.இது குடல் இயக்கத்தை மேம்படுத்துவதோடு குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். உலர் திராட்சையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்து ஒட்டுமொத்த ஜீரண ஆற்றலையும் மேம்படுத்தும்.
தூக்கமின்மையால் அவதிப்படறீங்களா? அப்போ நீங்க தான் இந்த பாலை கட்டாயம் குடிக்கணும். பாலில் உலர்ந்த திராட்சையை ஊறவைத்து குடிப்பதால் உங்களுடைய தூக்க சுழற்சி சீராகும். ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும்.
மெலடோனின் என்னும் ஹார்மோனை சீராக்குவதன் மூலம் மன அமைதியும் நல்ல தூக்கமும் உண்டாகும்.
நம்முடைய இதய ஆரோக்கியம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையுமே தீர்மானிக்கும் ஒன்று என்று சொல்லாம். உலர் திராட்சை ஊறவைத்த பாலை இதயத்தின் நண்பன் என்று சொல்லலாம்.
உலர் திராட்சையில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான அளவில் வைத்திருக்க உதவுகிறது. அதோடு அவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கொல்ஸ்டிராலையும் குறைக்கின்றன. இதன்மூலம் இதயத் தமனி மற்றும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதல், ரத்தம் உறைதல் ஆகியவை தடுக்கப்பட்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
பாலில் உள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்தாகும். உலர் திராட்சையிலும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்கிற போரான் உள்ளிட்ட தாதுக்கள் அதிகமாக இருக்கின்றன.அதனால் இந்த கிஷ்மிஷ் பாலை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எலும்புகளை வலுப்படுத்தவும் வயதானவர்களுக்கு உண்டாகும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். அவர்களுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுக்கும் பானமான இந்த கிஷ்மிஷ் பால் இருக்கும்.
உலர் திராட்சை பாலுடன் சேரும்போது அதிலுள்ள புரதம் அந்த சக்தியை நீண்ட காலத்திற்குத் தக்கவைக்க உதவுகிறது. இதனால், ஸ்வீட் கிரேவிங்கை கட்டுப்படுத்த முடியும்.
பாலில் ஊறவைத்த உலர் திராட்சை உடலுக்கு இயற்கையான டீடாக்ஸ் பானமாகச் செயல்படும். இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து செல்களில் சேதம் ஏற்படாமல் தடுக்க உதவி செய்கிறது.
உடலை டீடாக்ஸ் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
காலையில் 15-20 உலர் திராட்சை பழங்களை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
பாலை காய்ச்சி வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதில் இந்த உலர் திராடட்சைகளைப் போட்டு வைத்து ஊறவிடுங்கள்.
இரவு கிஷ்மிஷ் நன்கு ஊறி மென்மையாக மாறியிருக்கும். அதை இரவு தூங்கச் செல்லும் முன் லேசாக சூடுசெய்து குடிக்கலாம்.