நாளை முதல் தமிழகத்தில் டோல் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் சுங்க சாவடி கட்டனம் மேலும் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் நாளை ஏப்ரல் 1ம் தேதி முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், எஞ்சி உள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.