மீன ராசிக்குள் சுக்கிரனும், புத பகவானும் பயணம் செய்து வருவதால் இரட்டை நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த நீச்சபங்க ராஜயோகத்தால் ரிஷபம், சிம்மம், கும்பம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு யோக பண பலன்களும் கிடைக்கப் போகின்றன.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறும். இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். புதன் கிரகம் கல்வி, வாக்கு, பேச்சு, வியாபாரம், புத்திக்கூர்மை உள்ளிட்டவற்றுக்கு காரணியாகும்.
பிப்ரவரி 27ம் தேதி மீன ராசிக்குள் புதன் பகவான் நுழைந்ததால் உருவான நீச்சபங்க ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் யோக பலன்களை அனுபவித்து வந்தனர். தற்போது மீன ராசியில் சுக்கிர பகவானும் பயணித்து வருவதால் இரட்டை நீச்சபங்க யோகம் உருவாகியுள்ளது. இந்த இரட்டை நீச்சபங்க யோகத்தால் சில ராசிக்காரர்கள் பண மழையில் நீச்சல் அடிக்கும் யோகம் பெறுவார்கள். ரிஷபம், சிம்மம், கும்ப ஆகிய மூன்று ராசிக்காரர்கள் இரட்டை நீச்சபங்க ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
புதன் மற்றும் சுக்கிரனின் அருளால் ரிஷப ராசியினர் நற்பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த பணம் உங்கள் கைக்கு தானாக வந்து சேரும். பணம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். முதலீடு சார்ந்த விஷயங்களில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி உண்டாகும். அபரிமிதமான லாபம் பெறும் காலகட்டமாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இது அதிர்ஷ்ட காலம். மீன ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் பயணத்தால் சிம்ம ராசியினர் இரட்டை நீச்சபங்க ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அரசு வேலையில் உள்ளோருக்கு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு வெளியில் இருந்து வரவேண்டிய நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணங்கள் உங்களைத் தேடி வரும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு பயணங்கள் முன்னேற்றத்தை தரும். சேமிப்பு, முதலீடுகளில் நல்ல லாபம் மற்றும் வளர்ச்சியைக் காண்பீர்கள். நிதி சார்ந்த விஷயங்கள் மகிழ்ச்சியை உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான காலகட்டமாகவும், நல்ல லாபத்தைப் பெறுவதற்கான யோகமும் உண்டு.
கும்ப ராசிக்காரர்களுக்கு பொதுவாகவே இது யோகமான காலம். சனியின் பிடியில் இதுவரை அவதிப்பட்டு வந்த நீங்கள், இப்போது நிம்மதி பெருமூச்சு விட துவங்கியிருப்பீங்க. இனி புதிதாக சொத்துகளை குவிக்கும் யோகத்தை புதன் மற்றும் சுக்கிர பகவான் வழங்கப் போகின்றனர். சேமிப்பு, முதலீடுகளில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். ஆன்மிக விஷயங்களில் தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்ல லாபத்தை தரக்கூடியதாக அமையும். தொழிலில் முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. எடுத்த காரியங்களில் வெற்றியோடு இரட்டை லாபத்தையும் பெற்றுத் தரும் யோகமான காலகட்டமாக இருக்கும்.