பயணிகளின் கனிவான கவனத்திற்கு ... நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
Dinamaalai February 23, 2025 01:48 AM

 
தமிழகத்தின் தலைநகர் சென்னையின் பொது போக்குவரத்து சேவைகளில் முக்கியமானவை மெட்ரோ ரயில்கள். இவை தொடங்கப்பட்ட போது கூட்டமே இல்லை. மக்கள் மின்சார ரயில்களிலும், பேருந்துகளிலும் தான் பயணம் செய்து வந்தனர். சில நாட்களுக்குள்ளாகவே மெட்ரோ ரயில்கள் பிக்கப் ஆக தொடங்கி விட்டன. 


தற்போது தினமும் லட்சக்கணக்கானோர் பணி , பள்ளி, கல்லூரிகளுக்கு என செல்ல தொடங்கியுள்ளனர்.  இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி  நாளை இரவு 10 மணி முதல் பிப்ரவரி 23ம் தேதி காலை 6 மணி வரை விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.