”நாளைய இயக்குனர்” நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த டாப் 10 இயக்குனர்கள்… இவருமா?
CineReporters Tamil February 23, 2025 04:48 AM

Kollywood: தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் எப்போதுமே போராடி வருவது வழக்கம். ஆனால் ஒரு சிலருக்கு அந்த வாய்ப்பு எளிதாகவே அமையும். இன்னும் சிலருக்கோ சில புதிய முயற்சிகள் கூட நடக்கும்.

அந்த வகையில் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் என்ற பிரபல நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் புதுமுக இயக்குனர்கள் குறும்படம் எடுத்து வெளியிடுவார்கள். அதில் நல்ல குறும்படங்கள் அந்த வாரத்தின் சூப்பர்ஹிட்டாக தேர்ந்தெடுக்கப்படும்.

பிரபல இயக்குனர்களான பாக்கியராஜ், வெற்றிமாறன் உள்ளிட்டோர் அந்த புதுமுகங்களின் படங்களுக்கு விமர்சனமும் சொல்லுவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இதுவரை நிறைய இயக்குனர்கள் வந்திருப்பது தான் ஆச்சரியம்.

அப்படி ஒரு டாப் 10 இயக்குனர்களின் லிஸ்ட் குறித்த தொகுப்பு தான் இது. முதலில் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டா, பிட்சா, மகான், ஜகமே தந்திரம், பேட்ட உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது சூர்யாவின் ரெட்ரோ படத்தினை இயக்கி இருக்கிறார்.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட மாஸ் ஹிட் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி. ஓ மை கடவுளே படம் மூலம் வந்து டிராகன் என்னும் வெற்றி படத்தினை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து.

சோர்ந்து இருந்த விஜய் சேதுபதியின் சினிமா கேரியரையே மாற்றிய நித்திலன் சுவாமிநாதன். தமிழ் சினிமா தொடங்கி சைனீஷ் வரை கொண்டு சென்ற விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா என்னும் படத்தினை கொடுத்தவர்.

காதலில் சொதப்புவது எப்படி மற்றும் வாயை மூடி பேசவும் என்னும் வெற்றி படங்களை கொடுத்த பாலாஜி மோகன். தனுஷின் மாரி2 படத்தின் மூலம் பெரிய பிரேக் தமிழ் சினிமாவில் கிடைத்தது. விஷ்ணு விஷால் நடிப்பில் முண்டாசுப்பட்டி படத்தினை இயக்கிய ராம்குமார்.

அதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஆச்சரிய படைப்பான ராட்ச்சன் படத்தினை இயக்கினார். படம் சூப்பர்ஹிட் அடித்தாலும் அதற்கடுத்து இவர் படங்களை இயக்கவே இல்லை. யோகி பாபுவின் திரை கேரியரில் முக்கிய படமான மண்டேலாவை இயக்கிய மடோன் அஸ்வின்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த மாவீரன் பல வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்த எஸ்கேவின் கேரியரையே மாற்றியது. தமிழ் சினிமாவில் நடிப்பில் அசத்தி வரும் அருண்ராஜ் காமராஜ் எஸ்கே நடிப்பில் கனா மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படங்களை இயக்கி இருக்கிறார்.

8 தோட்டாகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீ கணேஷ். பின்னர் அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் படத்தினை இயக்கினார். உரியடி படத்தினை எழுதி தயாரித்த விஜய் குமார். சூரரைப் போற்று படத்துக்கு டயலாக் எழுதியது இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.