இம்மாதம் பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நீதிமன்ற பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
வழக்கறிஞர் சட்டத்திருத்த வரைவு மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னையில் நடந்த தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.