புரதம்,கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், செலினியம் , வைட்டமின் A, B, B6, B9m C, D, D3, கரோட்டினாய்டுகள் இப்படி ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுதான் ஆட்டு ஈரல்கள்.
மட்டன் வகை என்றாலும், ஆட்டு கல்லீரலில் கலோரிகள் குறைவாகவே இருக்கிறது.. கோழி, மாட்டிறைச்சியின் கல்லீரலைவிட, ஆட்டு கல்லீரலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளதால், நன்மையையே தருகிறதாம. முக்கியமாக இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கி, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்வதில், ஆட்டு ஈரல்களுக்கு பெரும் பங்கு உள்ளது.. இதனால், அனீமியா என்று சொல்லப்படும் ரத்த சோகை குறைபாடு நீங்குகிறது.. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளளவர்களும், உடல் மெலிந்து பலமில்லாமல் இருப்பவர்களும் வாரம் ஒருமுறையாவது இந்த ஈரலை சாப்பிடலாம்.
ஆட்டு ஈரலிலுள்ள வைட்டமின் A சத்துக்கள், நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்றவற்றின் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவுகிறது.. இந்த ஈரலில், நமக்கு தேவையான அனைத்து புரதச்சத்துக்களும் உண்டாகக் கூடிய அமினோ அமிலம் உள்ளது.. இந்த சத்துக்களானது, தசை நிறை பராமரிப்பு, திசு சரிசெய்தல், ஹார்மோன் உற்பத்தி, தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது... கல்லீரலில் உள்ள வைட்டமின் B, மன அழுத்ததிற்கு சிறந்த மருந்தாகும்.ஆனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், இந்த ஆட்டு கல்லீரலை 419 கிராம் அளவே சாப்பிட வேண்டுமாம்.. இந்த அளவில் சாப்பிட்டாலும், சரியான உடற்பயிற்சியும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கொழுப்பின் அளவு கூடிவிடும்..
இதனால், உடலின் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது.. மாதவிடாய் நின்ற பெண்கள் இதை சாப்பிடலாம். இதனால் கண் பார்வை சீராக இருக்கும்... கர்ப்பிணி பெண்களும் ஆட்டு ஈரலை சாப்பிடுவதால், கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமாம்.. ஆனால், அதிக அளவு வைட்டமின் A உள்ளதால், கர்ப்பிணிகள் இதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். எனவே, டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் இதை கர்ப்பிணிகளும் சாப்பிட வேண்டாம்.
அதற்காக மற்றவர்களும் அதிக அளவு இதனை எடுத்து கொள்ளகூடாது.. காரணம், கல்லீரலில் ஆரோக்கியமான மோனோ- மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இருந்தாலும், ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகளும், நிறைவுற்ற கொழுப்புகளும் இருப்பதை மறந்துவிடக்கூடாது.. இந்த நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இதய நோயுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதால், இதய நோய் உள்ளவர்கள், பக்கவாதம் பாதிப்பு உள்ளவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், கல்லீரல் சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்த்து விட வேண்டும்.
மாதம் ஓரிரு முறை, குறைந்த அளவு கல்லீரலை எண்ணெய் குறைவாக பயன்படுத்தி சமைக்கலாம்.. அதேபோல, எப்போது ஈரலை சமைத்தாலும், பூண்டையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், 2, 3 நாள் பதப்படுத்தப்பட்டு சமைக்கப்படும் ஈரலை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.