எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. நேற்று கூட இலங்கை கடற்படை கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இரண்டாவது முறையாக ஏலத்தில் விடுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்இன்று காலை கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களுடைய 5 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். முதலில் 18 மீனவர்களை கைது செய்த நிலையில் அதற்கு அடுத்து 14 மீனவர்களை கைது செய்தது. மேலும் ஒரே நாளில் 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.