கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ். இவருக்கு 88 வயது ஆகும் நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ரோம் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் கடந்த 14ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் தற்போது செயற்கை சுவாசம் மூலமாக அவருக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக வாடிகன் தேவாலயம் அறிவித்துள்ளது. மேலும் போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.