முகம் சுழிக்க வைக்கும் பேச்சு:சமீபகாலமாக மிஷ்கின் பற்றிய செய்தி நாள்தோறும் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் இருக்கின்றது. எந்தவொரு பட விழாவானாலும் அங்கு மிஷ்கின் இருக்கிறார் என்றால் ஒரே களேபரம்தான். இன்று என்ன பேசப்போகிறார் மிஷ்கின்? எப்படி பேசப்போகிறார்? என்ற ஆர்வத்தை உருவாக்கி விடுகிறார். அதற்கு ஒரே காரணம் அவருடைய கெட்டவார்த்தை. பொதுமேடையில் நாகரீகம் அறிந்த பேச வேண்டும் என்று சொல்வார்கள்.
சமுத்திரக்கனி சொன்ன காரணம்:ஆனால் இப்படி பேசியாவது இந்தப் படம் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துவிடாதா என்ற காரணத்தினால்தான் மிஷ்கின் இப்படி பேசுகிறார் என சமுத்திரக்கனி கூறினார். ஏன் கொட்டுக்காளி பட விழாவிலும் நிர்வாணமாக நிற்பேன் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை பற்றி சமுத்திரக்கனி மிஷ்கினிடம் கேட்டபோது அதற்கும் இந்த மாதிரியான பதிலைத்தான் கொடுத்தாராம் மிஷ்கின்.
இப்படி ஒரு நல்ல எண்ணமா?:அதாவது இப்படியாவது இந்தப் படத்தை பார்க்க வரமாட்டானா? அப்படி என்ன இந்தப் படத்தில் இருக்கிறது என்பதை பார்க்க திரையரங்கிற்கு வருவான் என்ற காரணத்தினால்தான் இப்படி பேசினேன் என மிஷ்கின் கூறினாராம். மொத்தத்தில் தன் படம் மட்டுமில்லாமல் நல்ல தரம் வாய்ந்த படங்கள் ஜெயிக்க வேண்டும் என விரும்புபவர் மிஷ்கின். சினிமா மீதும் படங்களின் மீதும் அதிக பற்று கொண்டவர் மிஷ்கின்.
25 லட்சம் கடன்:உதாரணமாக விசாரணை படத்தை பார்த்து முடித்துவிட்டு தமிழ் சினிமாவில் இருக்கிற அனைத்து இயக்குனர்களை அழைத்து பெரிய ஹாலில் உட்கார வைத்து அந்தப் படத்தை போட்டுக்காண்பித்தார் மிஷ்கின். அதற்கு கிட்டத்தட்ட 20 லிருந்து 25 லட்சம் செலவு ஆனது. அப்போது அவரிடம் கையில் காசும் இல்லை. ஆனாலும் கடனாக 25 லட்சம் பெற்றுக் கொண்டு அந்தப் படத்தை போட்டுக்காண்பித்தார் மிஷ்கின்.
இத்தனைக்கும் விசாரணை படம் மிஷ்கின் படமே இல்லை. வெற்றிமாறனின் படைப்பு. ஆனால் அந்தப் படத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என போராடியவர் மிஷ்கின். இது மாதிரியான எண்ணம் யாருக்கும் வரும் என என்னால் சொல்ல முடியாது என சமுத்திரக்கனி கூறினார்.