தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான அவல சம்பவங்கள் தினம் தோறும் நடந்து வருகிறது அதில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க அரசு தவறிவிட்டது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் சமீபத்தில் அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
விடுதி வாட்ச்மேன் கைது
இதிலே சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் ஒன்றை கிடைத்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விடுதி வாட்ச்மேன் பாலியல் தொந்தரவு அளித்தது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. அதன் பின்னர் 56 வயது வாட்ச்மேன் அழகப்பனை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணையை போலீசார் அழகப்பனிடம் கடுமையாக விசாரித்து வருகின்றனர்.
பாலியல் துன்புறுத்தலுக்கு 181:
இது போன்ற அவலங்கள் ஆங்காங்கே நடப்பதால் பெண்கள் வெளியில் வர பயந்து வீட்டிற்குள்ளே இருக்கின்றன. இந்நிலை மாறுமா? என மக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சனைக்கு 181 எண்ணை அழைக்கவும்.