ஜெர்மனி தேர்தலில் ஆட்சியை பிடித்த எதிர்க்கட்சி கூட்டணி! யார் இந்த ஃப்ரெட்ரிக் மெர்ஸ்?
GH News February 24, 2025 07:10 PM

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக்கட்சி ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூட்டணிக் கட்சியை சேர்ந்த நிதி அமைச்சரை சான்சலர் ஒலாப் ஸ்கால்ஸ் பதவி நீக்கம் செய்ததால் கூட்டணி கட்சிகள் ஆட்சியை கலைக்க திட்டமிட்டன. இதனைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சான்சலர் ஒலாப் ஸ்கால்ஸ் அரசு தோல்வி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் எதிக்கட்சியான கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரான ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியின் ஓலஃப் ஸ்கோல்ஸ் படுதோல்வி அடைந்தார். கன்சர்வேடிவ் கூட்டணியில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சோஷியல் யூனியன் கட்சிகள் அதிக வாக்குசதவீத்தை அறுவடை செய்து  ஃப்ரெட்ரிக் மெர்ஸ்க்கு வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளது.

கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு கூட்டணி மொத்தமாக 28.5 சதவிகித வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஃப்ரெட்ரிக் மெர்ஸ், தேர்தலுக்கு முன்பாக ஜெர்மனியில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இது அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றுக் கொடுத்துள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இதே பாணியை கையிலெடுத்து தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். இதேபோல் ஃப்ரெட்ரிக் மெர்சும் அதே பாணி வாக்குறுதி மூலம் வெற்றி பெற்று இருக்கிறார். சட்ட நிபுணர்கள் பின்னணி கொண்ட குடும்பத்தில் 1955ம் ஆண்டு ஜெர்மனியின் பிரிலோன் நகரில் பிறந்தவர் மெர்ஸ். இவரது மனைவி சார்லெட் மெர்சும் சட்ட வல்லுநர் தான். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

1994ல் ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கு தேர்வான ஃப்ரெட்ரிக் மெர்ஸ் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். 2009ல் அரசியலில் இருந்து ஓரங்கப்பட்டதால் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.  10 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்கல் பதவியை ராஜினாமா செய்தபின்பு மீண்டும் அரசியலுக்கு திரும்பினார்.

பின்னர் தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் 2022ல் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சியை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து அக்கட்சியின் தலைவர் ஆனார். ஜெர்மனி பொருளாதாரம் தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில், பொருளாதாரத்தை உயர்த்துவேன் என வாக்குறுத்தி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் ஃப்ரெட்ரிக் மெர்ஸ். 

ஃப்ரெட்ரிக் மெர்ஸ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ''அமெரிக்காவைப் போலவே ஜெர்மனி மக்களும் முட்டாள்தனமான கொள்கைகளைப் புறம்தள்ளி தேர்தலில் சரியான முடிவை எடுத்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.