தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ரவி மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ரவி மோகன் இயக்குனர் கணேஷ் கே பாபுவுடன் சேர்ந்து தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு கராத்தே பாபு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட இவரிடம் உங்கள் இளமையின் ரகசியம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பேன். அதேபோல இரவும். இதுதான் அதற்கு காரணம் என்று தெரியாது. ஆனால் இதைத்தான் செய்கிறேன். இதைத் தவிர வேறு ஏதும் பெரிதாக இல்லை. ஏதோ அப்பா அம்மா செய்த புண்ணியம்” என்று கூறியுள்ளார்.