பாகிஸ்தான் - வங்காளதேசம் நாடுகள் 1971ம் ஆண்டு இரண்டாகப் பிரிந்த பிறகு, முதன்முறையாக நேரடி வணிகம் செய்ய தொங்கியிருக்கின்றன.
அரசு அனுமதியுடன் முதல் சரக்கு கப்பல் பாகிஸ்தானின் குவாசிம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி மாத தொடக்கத்தில் இதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வர்த்தக கழகம் வழியாக 50,000 டன்கள் பாகிஸ்தானி அரிசை வாங்குகிறது வங்காள தேசம்.
பாகிஸ்தானின் தி எக்ஸ்பிரஸ் ட்ரிபுனே செய்திதாள் அறிக்கையில், "முதன்முறையாக, பாகிஸ்தான் தேசிய கப்பல் போக்குவரத்து கழகத்தின் கப்பல்கள் (PNSC) அரசின் சரக்குகளை எடுத்துக்கொண்டு வங்காளதேசம் துறைமுகத்துக்கு புறப்பட்டுள்ளது. இது கடல்சார்ந்த வணிகங்களில் முக்கிய மைல்கல்" எனக் குறிப்பிடபட்டுள்ளது.
கிழக்கு பாகிஸ்தான், 1971ம் ஆண்டு விடுதலை பெற்று வங்காள தேசம் நாடு உருவானது. அதன்பிறகு இருநாட்டுக்கும் இடையில் வர்த்தக உறவு இருந்ததில்லை.
2025 பிப்ரவரி தொடக்கத்தில்தான் முதன்முதலாக வர்த்தகம் நடைபெறுகிறது. 50,000 டன்கள் அரிசை இரண்டு கட்டங்களாக பாகிஸ்தான் வர்த்தக கழகம் அனுப்புகிறது. இரண்டாவது கட்டமாக 25,000 டன் அரிசி மார்ச் மாத தொடக்கத்தில் அனுப்பப்படவிருக்கிறது.
இருநாடுகளுக்கும் இடையிலான இந்த பொருளாதார ஒத்துழைப்பு நேர்மறையான மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதனால் பல தசாப்தங்களாக பூட்டியிருந்த வர்த்தக வழிகள் திறக்கப்படுகின்றன.
வங்காளதேச பிரதமரான ஷேக் ஹசீன நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு பாகிஸ்தான் உடனான உறவில் அந்நாடுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.