வங்கதேசம் காக்ஸ் பஜாரில் விமானப்படைத் தளம் மீது தாக்குதல், ஒருவர் பலி!!
GH News February 24, 2025 08:10 PM

டாக்கா: வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தது இருப்பதாக  டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. ISPR அறிவிப்பின்படி, அருகிலுள்ள சாமிதிபரா கிராமத்தைச் சேர்ந்த சில விஷமிகள் காக்ஸ் பஜாரில் உள்ள விமானப்படைத் தளத்தைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இறந்தவர் சாமிதிபரா பகுதியைச் சேர்ந்த ஷிஹாப் கபீர் நஹித் (25) என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர். காக்ஸ் பஜார் சதர் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி சபுக்தகின் மஹ்மூத் சோஹேல் கூறுகையில், ''சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவமனைக்கு இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டார்" என்று தெரிவித்து இருக்கிறார். 

பாதிக்கப்பட்டவரின் தலையின் பின்புறத்தில் ஆழமான காயங்கள் இருந்தன. மேலும், அவரது மரணத்திற்கான காரணம் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று சோஹேல் கூறியதாக டெய்லி ஸ்டார் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து ISPR உதவி இயக்குனர் ஆயிஷா சித்திக்கா வெளியிட்ட செய்திக்குறிப்பில், விமானப்படை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார். இது தீவிரவாத தாக்குதலாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.