பட்டப்பகலில் முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் செயின் பறிப்பு!
Dinamaalai February 24, 2025 09:48 PM


கேரளா மாநிலம் கண்ணூரில் வசித்து வருபவர்  மேரி .இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மூதாட்டி தனியாக வருவதை பார்த்த மர்ம நபர் ஹெல்மெட் அணிந்தபடி ஸ்கூட்டியில் வந்தார். அவர் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல அருகில் வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டியின் சங்கிலியை பறித்துகொண்டு ஓடி விட்டார்.

இதனால் மேரி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு அவர்  வந்த ஸ்கூட்டியை பிடித்து இழுத்தார். இருப்பினும் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.அவர்  அணிந்திருந்தது வெறும்  கவரிங் நகை தான்.

இந்த விவகாரம் குறித்து மேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா கட்சிகளின் அடிப்படையில் 41 வயது இப்ராஹிம்  என்பவரை கைது செய்தனர். இவர் பல்வேறு இடங்களில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.