உஷார் மக்களே... அதிகரிக்கும் கள்ள நோட்டுகள் புழக்கம்… ஒரிஜினிலை கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!
Dinamaalai February 24, 2025 09:48 PM


இந்தியாவில் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காக ரூ500 ரூ1000 நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதனையடுத்து தற்போது மக்கள் கையில் புழங்கிக் கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.

சமீபத்தில் கூட ரூ 200 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் போலி ரூ 200 நோட்டுக்களை அடையாளம் காண ரிசர்வ் வங்கி சில முக்கியமான குறிப்புகளை வெளியிட்டுள்ளது . இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி போலி ரூபாய் நோட்டுக்களை யார் வேண்டுமானாலும் எளிதில் அடையாளம் காணலாம்.


அதன்படி ரூபாய் நோட்டின் இடது பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் 200 என்ற எண் எழுதப்பட்டிருக்கும். அந்த நோட்டின் மையத்தில் மகாத்மா காந்தியின் தெளிவான படம் இருக்கும். RBI, Bharat, INDIA மற்றும் 200 ஆகிய எழுத்துக்கள் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டின் வலது பக்கத்தில் அசோகத் தூணை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம் இடம் பெற்று இருக்கும். இந்த அம்சங்களை சரி பார்ப்பதன் மூலம் நீங்கள் போலி மற்றும் உண்மையான நோட்டுக்களை எளிதில் வேறுபடுத்தி கண்டுபிடித்து விடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.