சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,600 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சனிக்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.160 உயந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,360 க்கு விற்பனை செய்யப்பட்டது. வாரத்தின் முதல் நாளான நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,440 க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,600 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,075க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.