பாஸ்போர்ட்டில் பாலினம் மாற்றம்.. டிரம்ப் உத்தரவால் அதிர்ச்சி அடைந்த டிக்டாக் பிரபலம்..!

அமெரிக்காவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம், திருநங்கையாக இருக்கின்ற நிலையில், அவரது பாஸ்போர்ட்டில் இதுவரை "பெண்" என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அது "ஆண்" என்று மாற்றப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன், "ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டுமே அமெரிக்காவில் ஏற்றுக் கொள்ளப்படும்" என்று அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்க டிக்டாக் பிரபலம் ஹண்டர் ஷாஃபர் என்பவர் திருநங்கை என்ற நிலையில், அவரது பாஸ்போர்ட்டில் இதுவரை "பெண்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்தில், அவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த நிலையில், புதிய பாஸ்போர்ட்டில் அவரது பாலினம் "ஆண்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
மேலும், அவர் மீண்டும் வெளிநாடு செல்லும் போது, பாலின வேறுபாட்டால் விமான நிலையத்தில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில், ஓட்டுநர் உரிமை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் "ஆண்" என மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், இது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
டிரம்ப் பிறப்பித்த ஒரே ஒரு உத்தரவு காரணமாக, அமெரிக்காவில் உள்ள திருநங்கைகள் அனைவரும் தங்களது பாலினத்தை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளதாக கூறப்படுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva