விஜய் மகன் ஜேசன் சஞ்சய் எடுக்கும் முதல் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா..? அப்போ பிராம்மாண்டமா தான் இருக்கும்..!!
SeithiSolai Tamil February 25, 2025 06:48 PM

தளபதி விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதில் இருந்து விலகிய அவர் அரசியலில் களமிறங்க உள்ளார். இந்த செய்தி அவருடைய ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஆனால் விஜய் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். சினிமாவை விட்டு விஜய் விலகும் இந்த சமயத்தில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக என்ட்ரி கொடுத்துள்ளார். தந்தை போல ஹீரோவாக வேண்டும் என்று இல்லாமல் தாத்தாவைப் போல இயக்குனராக வேண்டும் என்று எண்ணத்தில் வெளிநாட்டிற்கு சென்று அதற்கெல்லாம் படித்துவிட்டு தற்போது லைக்கா தயாரிப்பில் தன்னுடைய முதல் படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார்.

இவர் இயக்கும் படத்தில் சந்திப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பாக தான் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மேலும் இந்த படம் 28 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் ஒரு பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அறிமுக இயக்குனரின் படத்திற்கு 25 கோடி பட்ஜெட் கிடைப்பது மிகப்பெரிய விஷயம் என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.