மார்புவலி குறைய
வெந்தயத்தை வேக வைத்து தேன்விட்டு பிசைந்து கூழாக்கி சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும்.
துளசி இலை சாறு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
தான்றிக்காயை பொடி செய்து அதில் 2 சிட்டிகை எடுத்து தேனில் கலந்து நாக்கில் தடவிவந்தால் மார்புவலி குறையும்.
இஞ்சிச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
இதயம் பலம் பெற
செம்பருத்திப் பூவை தண்ணீர் தேன் கலந்து சாப்பிட இதயம் பலம் பெறும்.
மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இதயம் வலிமை பெறும்.
நெஞ்சு எரிச்சல் குறைய
இஞ்சிசாறு, எலுமிச்சை சாறுவுடன் தேன் கலந்து சாப்பிட நெஞ்சு எரிச்சல் குறையும்
நெஞ்சுவலி குறைய
வெந்தயக்கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு காய்ச்சி வடிக்கட்டி அந்த நீரில் தேன் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் பத்து நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி குறையும்.