நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது மற்றும் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் ஓட்டுநருக்கு மார்ச்13 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். இன்று விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட போலீசாரின் சம்மனை பாதுகாவலர் கிழித்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீசாரை தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறி சீமான் வீட்டின் காவலாளி மற்றும் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் மீது 5 பிரிவுகளிலும், உதவியாளர் சுபாகர் மீது 3 பிரிவுகளிலும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சம்மனை கிழித்தது மற்றும் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் ஓட்டுநருக்கு மார்ச்13 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாவலர் அமல்ராஜ் மற்றும் ஓட்டுநர் சுபாகருக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சோழிங்கநல்லூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.