கணவரோடு திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை திடீர் விசிட் அடித்த ஹன்சிகா… வைரலாகும் வீடியோ..!!!
SeithiSolai Tamil February 28, 2025 07:48 PM

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். பூரி ஜெகனாத்தின் தெலுங்கு திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக முதன்முதலில் அறிமுகமானார். பிறகு தமிழில் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமுக வலைதங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது இவர் தனது கணவரோடு திருப்பதிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.