நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று வளசரவாக்கம் காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சீமான் மனு தாக்கல் செய்த நிலையில் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நேற்று சீமான் வீட்டில் சம்மன் ஒட்டினர். அதனை நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கிழித்த நிலையில் அவர் வீட்டு காவலாளி போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.
இதனால் சீமான் வீட்டு காவலாளிகள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சீமான் இன்று மாலை 6 மணிக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகிறார். தர்மபுரியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தை முடிந்து விட்டு சென்னை திரும்பவும் சீமான் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார். மேலும் ஈரோடு காவல் நிலையத்தில் பெரியார் குறித்த வன்முறை பேச்சு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.