சூப்பர்ஸ்டார் ரஜினியும், இளையராஜாவும் நண்பர்களாகத் தானே இருக்காங்க. ஆனா ஏன் வீரா படத்துக்கு அப்புறம் இருவரும் இணையவில்லை. திரும்பவும் இருவரும் இணைந்து படங்களில் பணியாற்ற வாய்ப்புகள் இருக்கான்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
80 மற்றும் 90களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பல படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. அவை எல்லாமே சூப்பர்ஹிட் தான். பாடல்களும் பட்டையைக் கிளப்பும் ரகங்களாகவே உள்ளன. இப்போது கேட்டாலும் அதற்கு தனி கேலரியே போடலாம். சினிமாவைத் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள். இருவருக்குமே ஆன்மிக உணர்வு மேலோங்கி உள்ளது. ரஜினி கூட இளையராஜாவை சாமின்னு தான் அழைக்கிறார்.
கமல், ரஜினி என இருவருடைய படங்களுக்கும் இளையராஜா அப்போது மியூசிக் போட்டுள்ளார். ஆனாலும் சாமி எனக்குக் கொடுத்ததைவிட கமலுக்குத் தான் நிறைய சூப்பர்ஹிட் சாங்ஸ் கொடுத்துள்ளார் அப்படின்னு ரஜினி ஒரு முறை பேசியிருந்தார்.
இசை அமைக்கவில்லை: இளையராஜா ஏன் இப்போதெல்லாம் கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைக்கவில்லை என்று சிலர் நினைப்பதுண்டு. அவர்களின் சந்தேகத்தைப் போக்கும் வகையில் பிரபலம் ஒருவர் இந்தக் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி இருக்கிறார்.
மிகப்பெரிய வியாபாரம்: அவர் சொல்வதைப் பார்த்தால் 'ஓகோ' இதுதான் காரணமா என்று நமக்குள் தோன்றும். அந்த வகையில் சினிமா என்பது நட்பை எல்லாம் தாண்டி ஒரு வியாபாரம். அதிலும் ரஜினிகாந்தின் படங்கள் என்பது மிகப்பெரிய வியாபாரம். அதுதான் இந்த இருவரையும் இணைய முடியாமல் இருப்பதற்குக் காரணம்னு நான் நினைக்கிறேன் என்கிறார்.
இளையராஜாவின் இசை: இளையராஜாவைப் பொருத்தவரை அவருக்கு இப்போது 83 வயது. சில சினிமா படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வருகிறார். அப்போது இருந்த ரசிகர்களின் ரசனைக்கு இளையராஜாவின் இசை எடுபட்டது. ஆனால் இன்றைய 2கே கிட்ஸ்கள் அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், ஜிவி.பிரகாஷ் என ப்ரஷாக மியூசிக்கை எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான் பெரிய தயாரிப்பாளர்களும்கூட ஒத்துக் கொள்கின்றனர் என்றே தோன்றுகிறது.
பயோபிக்: அதனால்தான் அனிருத்தை பல பெரிய படநிறுவனங்கள் புக் செய்கின்றன. அதே நேரம் இளையராஜா மேடைக்கச்சேரிகளில் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பயோபிக் விரைவில் திரைப்படமாக வெளிவர உள்ளது. அதில் தனுஷ் நடிக்க உள்ளார். அதற்கான ப்ரீபுரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.