சென்னையில் உள்ள அண்ணா நகர், அன்னை சத்யா நகர், முதல் தெருவில் வசித்து வருபவர் ராபர்ட் (வயது 28). இவர் பழைய குற்றவாளி ஆவார். உள்ளூரில் ரௌடி, கஞ்சா விற்பனை என இருந்து வந்தவர், குண்டாசில் சிறைக்கு சென்று மீண்டும் வெளியே வந்துள்ளார்.
இவர் தற்போது திருநங்கை ஒருவரை காதலித்து, அவருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில், தந்தையிடம் சுடுதண்ணீர் போட்டு தருமாறு கூறியவர், வீதியில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்தபடி வந்த 6 பேர் கும்பல், ராபர்ட்டை ஓடஓட விரட்டி சரமாரியாக, கொடூரமாக வெட்டிக்கொலை செய்து தப்பியது.
இதையும் படிங்க:
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் சுமார் 25 நிமிடங்களுக்கு பின்னர் ராபர்ட்டை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு அவர் அதிக ரத்தப்போக்கு மற்றும் படுகாயம் காரணமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்தனர்.
விசாரணையில், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பாக எழுந்த போட்டி தகராறில், எதிர்தரப்பு கும்பலால் கொலை செய்தது தெரியவந்தது. 5 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த முன்பகை காரணமாக கொலை நடந்தது உறுதியானது.
கைதான 6 நபர்களில் லோகு, சங்கர் பாய் ஆகியோர் கொலை மற்றும் அதற்கு திட்டமிடலை தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டேட்டஸாகவும் பகிர்ந்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: