தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
GH News February 28, 2025 11:10 PM

வெள்ளரிக்காய் என்பது இயற்கையாகவே நீர்சத்து மிகுந்த, குறைந்த கலோரி கொண்ட, நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இது உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சி அளிப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. ஆனால், ஒவ்வொரு உணவுக்கும் அளவோடு இருப்பதே சிறந்தது. தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதா? அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்ன? என்று விரிவாக பார்க்கலாம்.

வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள்:

நீர் சத்து – 96%
கலோரி – 15 கலோரி
நார்ச்சத்து – 0.5 கிராம்
கார்போஹைட்ரேட் – 3.6 கிராம்
போட்டாசியம் – 147 மில்லி கிராம்
மெக்னீசியம் – 13 மில்லி கிராம்
வைட்டமின் சி – 2.8 மில்லி கிராம்
வைட்டமின் கே – 16.4 மில்லி கிராம்

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்:

1. நீர் சத்து அதிகரிப்பு :

வெள்ளரிக்காய் 96% நீர்சத்து கொண்டது. நீர் குறைவாக உட்கொள்பவர்களுக்கு இது மிக சிறந்த நிவாரணம். தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லாதவர்களுக்கு, வெள்ளரிக்காய் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும்.

2. உடல் குளிர்ச்சியடையும்:

வெள்ளரிக்காய் இயற்கையாகவே ஒரு குளுமையான உணவாகும். கோடைக் காலங்களில் இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் தாகம் ஏற்படாமல் தடுப்பதுடன், உஷ்ணத்தை குறைக்க உதவுகிறது.

3. செரிமான மண்டல ஆரோக்கியம் :

இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும். வயிற்றில் சீறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்தால் நன்மை கிடைக்கும்.

4. எடை குறைக்க உதவும் :

வெள்ளரிக்காய் குறைந்த கலோரி கொண்டது. உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. வயிற்றை நிரப்புவதால், அதிக உணவுக்கான ஆசையை குறைக்கிறது.

5. தோல் மற்றும் முடி ஆரோக்கியம் :

is it okay to eat cucumber everyday

வெள்ளரிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளது. முகப்பரு, எண்ணெய் குறைக்க உதவும். சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். முடி வளர்ச்சிக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

6. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் : 

இதில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இரத்த நாளங்களை மென்மையாக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதின் தீமைகள் :

1. அதிக நீர்சத்து – வெள்ளரிக்காயின் நீர்சத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். இதனால் சிலர் சிறுநீரகத்தில் அழுத்தம் உணரலாம்.

2. குளிர்ச்சியான உணவு – உடலில் குளிர்ச்சி அதிகரிக்கக் கூடியது என்பதால் சிலர் கண்டிப்பாக இதை அதிகம் சாப்பிடக்கூடாது. சளி, இருமல், தொண்டை கோளாறுகள், சைனஸ், வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது அதிகமாக சாப்பிட கூடாது.

3. சிறுநீரக நோயாளிகள் - வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம் அளவு அதிகமாக இருப்பதால், சிறுநீரக செயல்பாடு குறைந்தவர்களுக்கு இது உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு இதை உணவில் சேர்க்கலாம்.
4. அலர்ஜி பிரச்சனைகள் - சிலருக்கு வெள்ளரிக்காய் உணவில் சேர்த்தால், வாயில் அரிப்பு, வியர்வை மிகை, தேமல் போன்ற அலர்ஜிகள் ஏற்படலாம். இது போன்றவை இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும்.

வெள்ளரிக்காயை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

காலை - உடலை டெடாக்ஸ்ஃபை செய்யும்.
மதிய உணவுடன் - செரிமானத்திற்கு உதவும்.
மாலை - சிற்றுண்டியாக உட்கொள்வது நல்லது.
இரவு - அதிகமாக சாப்பிடக்கூடாது. சிலருக்கு வாயு பிரச்சனை ஏற்படும்.

வெள்ளரிக்காய் உண்பதற்கான சிறந்த வழிகள் : 

அப்படியே நறுக்கி உண்ணலாம்.
சாலட் - வெள்ளரிக்காயுடன் தக்காளி, வெங்காயம், புதினா சேர்த்து சாலட் செய்யலாம்.
ஜூஸ்- வெள்ளரிக்காய், இஞ்சி, புதினா சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கலாம்.
ரைத்தா - தயிருடன் கலந்து வெள்ளரிக்காய் ரைத்தா செய்யலாம்.

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?

வெள்ளரிக்காய் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது. ஆனால், அளவோடு சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 1-2 வெள்ளரிக்காய் போதுமானது. சிறுநீரகப் பிரச்சனை, அலர்ஜி போன்றவை உள்ளவர்களால் தவிர்க்கலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.