சென்னை அண்ணாசாலையில் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மிகவும் பரபரப்பான பகுதியாக இருந்து வரும் அண்ணாசாலையில் 5 அடுக்கு வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள், மக்கள் திடீரென நில அதிர்வை உணர்ந்ததாக கூறி அலறி அடித்து வெளியேறியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் பிற அதிகாரிகள் பணியாளர்கள் உணர்ந்தது போல இது உண்மையான நில அதிர்வா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீதிகளுக்கு ஓடி வந்ததால் அப்பகுதி பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K