கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்த வழக்கில் விஜயா என்பவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜீன் 19-ம் தேதி உயிரிழந்த தங்கராசு என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு அந்த சோதனை முடிவின் அடிப்படையில் தங்கராசு மெத்தனால் கலந்த சாராயம் குடித்து உயிரிழந்தது உறுதியானது.
இந்நிலையில், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் புதிய வழக்கு பதிவு செய்து இந்த வழக்கில் நேற்றைய தினம் பிரபல சாராய வியாபாரிகள் கன்னுகுட்டி என்கின்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர்கள் இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி ஹரிஹரசுதன் உத்தரவிட்டார். தற்போது இதே வழக்கில் கன்னுக்குட்டியின் மனைவி விஜயா என்பவரையும் கள்ளக்குறிச்சி போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட விஜயாவை வரும் மார்ச் நான்காம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.