இந்தியாவில் தமிழக சட்டசபை தான் நடுநிலையாக நேர்மையாக செயல்படுகிறது எனக் செயற்கை நுண்ணறிவு தளங்களில் கேட்டால் கூறுவதாக தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துளார். ஆனால், அதை ஏ.ஐ., தளங்கள் மறுத்துள்ளன. இதனையடுத்து அப்பாவுவின் கருத்துக்கு நெட்டிசன்கள் பல விதமான கருத்துகளை தெரிவித்து விமர் சித்து வருகின்றனர்.
இன்று நிருபர்களை சந்தித்து அப்பாவு பேசுகையில், 'இந்திய அளவில் சட்டசபைகளில் நடுநிலையோடு, நேர்மையாக, சுதந்திரமாக சட்டசபையை நடத்துவதில், சபாநாயகர் அப்பாவு தான் முதலிடத்தில் உள்ளார் என செயற்கை நுண்ணறிவு தளங்கள் கூறுவதாக அவரே அவரைப்பற்றி பெருமையாக தெரிவித்து இருந்தார்.
ஆனால், உலகில் முன்னணியில் உள்ள செயற்கை நுண்ணறிவு தளங்களில் இது குறித்து தகவல் தகவல் தேடப்பட்டது. ஆனால், அதனை அந்தத் தளங்கள் மறுத்து உள்ளன.
தமிழா சபாநாயகர் அப்பாவுவின் பேட்டி சமூக வலைதளங்களில் வெளியானது. சமூக வலைத்தளங்களில் அதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.