விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிய மண்டப மேனேஜர் குறித்து புகார் அளிக்க மண்டபத்தின் ஓனர் வீட்டுக்கு செல்லும் மீனா, அவரிடம் முறையிடுகிறார்.
ஆனால் அந்த மேனேஜரோ ஓனரிடம் பணத்தை வாங்கி கொண்டு இந்த பெண் தான் ஏமாற்றுகிறார் என்று கூற, அதற்கு ஓனர், ’ஏன் புது ஆட்களுக்கு ஆர்டர் கொடுக்கிறாய்? வழக்கமாக கொடுப்பவர்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே? என்று மேனேஜரை திட்டி, மீனாவையும் வெளியே அனுப்பி விடுகிறார். இதனால், மீனா அழுதுகொண்டே வெளியே வருகிறார்.
இந்த நிலையில், சிந்தாமணி விஜயாவிடம் மீனா ஏமாந்த கதையை கூற, விஜயா மகிழ்ச்சி அடைகிறார். பின்னர், விஜயா ரவிக்கு போன் செய்து, “இன்று இரவு எல்லோருக்கும் சாப்பாடு எடுத்துட்டு வா. முக்கியமாக ஸ்வீட் எடுத்துட்டு வா!”என்று மகிழ்ச்சியாக கூறுகிறார். இதைக் கேட்ட ரவி ஆச்சரியமடைகிறார். இதைக் கேட்ட ஸ்ருதி, “உங்க அம்மா சந்தோஷப்படுறாங்கன்னா, மீனா அல்லது முத்து அழுகுறாங்கன்னு அர்த்தம்!” என்று சொல்ல, ரவியும் அதை ஒப்புக்கொள்கிறார்.
ரவி மற்றும் ஸ்ருதி சாப்பாடுடன் வீட்டுக்கு வரும்போது, விஜயா மகிழ்ச்சி அடைந்து அனைவருடனும் பேசுகிறார். அப்போது கூட, ஸ்ருதி “இதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது!” என்று கூறுகிறார். அனைவரும் மகிழ்ச்சியோடு சாப்பிடும் தருணத்தில், மீனா சோகமான முகத்துடன் வருகிறார்.
ஸ்ருதி மீனாவிடம் ‘”எதற்காக சோகமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்க, மீனா,”ஒன்றுமில்லை!” என்று கூறி சமாளிக்கிறார். ஆனால், விஜயாவின் மகிழ்ச்சியை பார்த்து குழப்பமடைகிறார்.
இந்த நிலையில், மீனாவுக்கு ஒரு கனவு வருகிறது. அந்த கனவில், முத்து வீட்டுக்கு வந்தபோது மீனா மண்டப விஷயத்தில் நடந்ததை கூற, மீனாவை அழைத்து கொண்டு மேனேஜரை பார்க்க செல்கிறார் முத்து. பின்னர், மண்டப மேனேஜரை அடித்து உதைத்து, ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து குத்தி கொலை செய்து விடுகிறார்.
இந்த கனவால் அதிர்ச்சி அடைந்த மீனா, இந்த விஷயத்தை முத்துவிடம் கூறக்கூடாது என்று முடிவு செய்கிறார். இந்த நிலையில், முத்து மீனாவுக்கு போன் செய்து, “மண்டப டெக்கரேஷன் வேலை எல்லாம் நன்றாக முடிந்ததா? என கேட்க, மீனாவும் அழுகையை அடக்கிக்கொண்டு நல்லபடியாக முடிந்தது என்று சொல்ல, இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
நாளைய எபிசோடில் அண்ணாமலை, மீனாவிடம், “நம்மை யாராவது ஏமாற்றினால், அவர்களை அவர்கள் வழியில் சென்று ஏமாற்ற வேண்டும்!” என்று கூற, மீனாவும் அதை ஒப்புக்கொண்டு, அந்த மண்டப மேனேஜரை ஏமாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
இதுதான் இன்றைய எபிசோட்! இனி என்ன நடக்கும் என்பதை நாளை பார்ப்போம்!