இதை தெரிஞ்சிக்கோங்க..! வாழைப்பழமும் கொய்யா பழமும் சேர்த்து சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா?
Newstm Tamil March 12, 2025 12:48 PM

பழங்கள் தானே என்ன ஆகப்போகிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் சேர்த்து சாப்பிடக் கூடாத சில பழங்களை சேர்த்து சாப்பிடும்பாது உடலில் சில பிரச்சினைகள் உண்டாகும்.


பழங்களை பொதுவாக அமிலத்தன்மை உள்ளவை, நீர்ச்சத்து அதிகமுள்ளவை, வைட்டமின் மினரல் ஆன்டி ஆக்சிடண்ட நிறைந்தவை, புளிப்பான பழங்கள், அதிக சர்க்கரை உள்ள பழங்கள் என பல வகைகளாகப் பிரிக்கலாம். இந்த ஒவ்வொரு தன்மையுள்ள பழங்களும் உடலில் வெவ்வேறு வகைகளில் செயல்படும். அவற்றை புரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.

அவற்றை புரிந்து கொள்ளாமல் எல்லா பழங்களையும் சேர்த்து சாப்பிடுவது சில ஆபத்துகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக பெண்கள் ஃப்ரூட் சாலட் சாப்பிடும்போது இதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இணைத்து சாப்பிட கூடாத பழ வகைகள் பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க.

முலாம்பழம் மற்றும் தர்பூசணி பழங்கள்

முலாம்பழம் மற்றும் வாட்டர்மெலன் வெயில் காலங்களில் அதிகமாகக் கிடைக்கும். கடைகளில் சென்று ஃப்ரூட் சாலட் வாங்கும்போது இந்த வாட்டர் மெலன் மற்றும் முலாம்பழங்களுடன் மற்ற பழங்களையும் சேர்த்து நறுக்கிக் கொடுப்பார்கள். ஆனால் வாட்டர்மெலன் மற்றும் முலாம்பழத்தை மற்ற எந்த பழத்தோடும் சேர்த்து சாப்பிடக் கூடாது.
இவையிரண்டிலுமே நிறைய நீர்ச்சத்து உண்டு. நார்ச்சத்தும் அதிகம். இதை மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது முழுவதுமாக நீர்ச்சத்து கிடைக்காமல் போகாலாம். மேலும் மற்ற பழங்களுடன் சேரும்போது செரிமானத்தில் பிரச்சினை ஏற்படும்.


புரதச்சத்துள்ள பழங்களும் மாவுச்சத்துள்ள பழங்களும்

அதிக புரதங்கள் கொண்ட பழங்களையும் மாவுச்சத்து அதிகமுள்ள பழங்களையும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடக் கூடாது.
உதாரணத்துக்கு வாழைப்பழத்தில் மாவுச்சத்து அதிகம். அதை புரதச்சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழம், கிவி, அவகேடோ போன்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.
செரிமானத்தின் போது புரதங்களை உடைக்க அமிலத்தன்மையும் மாவுச்சத்தை ஜீரணிக்க காரத்தன்மையும் தேவை. இவையிரண்டும் எதிரானவை. அதனால் இந்த இரண்டு வகையான பழங்களை சேர்த்து சாப்பிடும்போது ஜீரண செயல்பாட்டில் தடை ஏற்படும். அதோடு கடுமையான வயிறு வலி, வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகளும் மலச்சிக்கல் பிரச்சினையும் உண்டாகலாம்.


இனிப்பான பழங்களுடன் அமிலத்தன்மை கொண்ட பழங்கள்

திராட்சை, பெர்ரி வகைகள், ஸ்டிராபெர்ரி, ஆரஞ்சு, மாதுளை, பீச், பிளம் வகைகள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட அமிலத் தன்மை கொண்ட பழங்களை வாழைப்பழம், மாம்பழம் மற்றும் பலாப்பழம் போன்ற அதிக இனிப்புச் சுவை கொண்ட பழங்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.
இவையிரண்டும் எதிரெதிர் தன்மையும் சுவையும் கொண்டவை. இவற்றை இணைத்து சாப்பிடும்போது செரிமான பிரச்சனைகள், குமட்டல், அசிடிட்டி மற்றும் தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகளை உண்டாக்கலாம்.


பப்பாளி மற்றும் எலுமிச்சை, ஆரஞ்சு பழம் சேர்த்து சாப்பிடுவது

பப்பாளி பழம் சாப்பிடும்போது லெமன், ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களைச் சேர்த்து சாப்பிடுவது மிக மிக மோசமான பழக்கமாகும். பொதுவாக சிலருக்கு ஃப்ரூட் சாலட்டுகளின் மீது எலுமிச்சை சாறு பிழிந்து பெப்பர் தூவி சாப்பிடுவது பிடிக்கும். இது உங்களுக்கு வித்தியாசமான சுவையைக் கொடுக்கலாம். ஆனால் உடலுக்கு நல்லதல்ல.
இவற்றை சேர்த்து சாப்பிடுவதால் ரத்த சோகை, ரத்த சிவப்பணுக்கள் குறைபாடு, ஹீமோ குளோபின்களில் ஏற்றத்தாழ்வு ஆகியவை உண்டாகலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இப்படி கொடுக்கவே கூடாது.


இறுதியாக,


பழங்கள் பொட்டாசியம், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நமக்குத் தேவையான பிற அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாக இருந்தாலும் மேலே சொன்ன பழங்களை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

அதேபோல பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒன்றாகச் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் பழங்களில் உள்ள அதிக சர்க்கரை காய்கறிகளின் செரிமான செயல்முறையை தடை செய்யும். நிறைய பேர் ஆரஞ்சு, கேரட் இரண்டையும் சேர்த்து ஜூஸாகக் குடிப்பார்கள். இது மிக மோசமான முறையாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.