இன்று மாசி மகம்... செல்வம் சேர... பாவங்கள் விலக... எப்படி வழிபட வேண்டும்?
Dinamaalai March 12, 2025 12:48 PM

செல்வங்கள் சேரவும், வாழ்க்கை வசப்படவும், பாவங்கள் விலகவும், மாங்கல்ய பலம் கூடவும் இன்றைய மாசி மக திருநாளை மிஸ் பண்ணாதீங்க. மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் நிறைந்திருக்கிற மாசி மக நாளில், அதிகாலை எழுந்து குளிக்கும் போது, புண்ணிய நதிகளில் நீராட முடியாதவர்கள், மனதிற்குள் கங்கை, யமுனை, சரவஸ்வதி, காவிரி என்று புண்ணிய நதிகளை மனதுள் நினைத்து, நீராடுவதாக நினைத்து நீராட வேண்டும்.

மகம் நட்சத்திரம் கேது பகவானுக்கு உரிய நட்சத்திரம். மகம் நட்சத்திரத்தில், சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். இன்று சிவபெருமானை வழிபட மறந்துடாதீங்க. இன்றைய மகம் நட்சத்திர நாளில் சிவனையும், பித்ருக்களையும் வணங்கினால் உங்கள் வாழ்வில் சகல நலன்களையும் பெற்று வளமாக வாழலாம். 

பெளர்ணமி தினம் சிவனுக்கும், முருகப் பெருமானுக்கும் உரிய வழிபாட்டு தினமாக கருதப்படுகிறது. பெளர்ணமியன்று அதனால் தான் கிரிவலம் வருகிறோம். நிலவொளியில் மலையைச் சுற்றி வருவதும், மலையையே சிவனாக பாவிப்பதும் அதனால் தான். இத்தனை விசேஷங்கள் கொண்ட பெளர்ணமி தினத்தில் விரதமிருந்து வழிபடுவது பல மடங்கு அதிக பலன்களை தரக் கூடியதாகும்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த இன்றைய மாசி மக நட்சத்திரம் இன்று அதிகாலை 3.48 மணிக்கு தொடங்கி நாளை மார்ச் 13ம் தேதி வரை இருக்கிறது.

மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் இன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். மேலும் சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.