டிராக்டர் மோதியதால் ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதது.
உத்திரபிரதேச மாநிலம் அமேதி நகரில் வசித்து வரும் பவானி என்கிற சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அதிவேகமாக வந்த டிராக்டர் ஒன்று சிறுமி மீது மோதியது. இந்த விபத்தில் அந்த சிறுமி அவ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த டிராக்டர் டிரைவர் விபத்து நடந்த பகுதியில் இருந்து தப்பி ஓடினார்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அந்த உயிரிழந்த சிறுமியின் உடல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.