உத்திரபிரதேச மாநிலத்தில் நாளை ஹோலி பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் யாரும் தொழுகைக்கு மசூதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முதலில் சம்பல் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த உத்தரவை பிறப்பித்த நிலையில் பின்னர் இதனை முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இந்நிலையில் நாளை ஹோலி பண்டிகையை முன்னிட்டு பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக உத்திரபிரதேச மாநில அரசு பேரணி செல்லும் வழியில் உள்ள அனைத்து மசூதிகளையும் தார்ப்பாய் மூலம் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. அதன் எதிரொலியாக தற்போது பேரணி பாதையில் உள்ள அனைத்து மசூதிகளையும் தார்ப்பாய் கொண்டு மூடும் நடவடிக்கைகள் நடைபெறுகிறது.
முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் நாளை ஹோலி பண்டிகையின் போது யாராவது வண்ணத்தை பூசினால் மத நல்லிணக்கத்தோடு பொறுமை காக்க வேண்டும் எனவும் அதற்காக யாரும் கோபப்படக்கூடாது என்றும் இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் முன்னதாக பாஜக எம்எல்ஏ ஒருவர் ஹோலி பண்டிகையின் போது இந்துக்களை பார்த்து பயமாக இருந்தால் முஸ்லிம்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் இந்துக்களை பாதுகாக்க முஸ்லிம்களுக்கு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்க வேண்டும் எனவும் கூறுகிறார். இதேபோன்று பாஜக கட்சியின் அலிகார் தொகுதி எம்பி தான் வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்கள் ஓட்டு தேவை இல்லை எனவும் இந்துக்கள் மட்டும் ஓட்டு போட்டால் என்றும் முன்னதாக ஹோலி பண்டிகை சர்ச்சையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்