இயக்குனராக அவதாரம் எடுக்கும் நடிகர் ரவி மோகன்..? படத்தின் கதை என்ன தெரியுமா..? லீக்கான தகவல்..!!
SeithiSolai Tamil March 14, 2025 04:48 PM

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது படம் ஒன்றை இயக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர் ‘ஜெயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இவர் நடிக்க தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. இவர் தற்போது ‘கராத்தே பாபு, ஜுனி ,பராசக்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ,இவர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து கோமாளி என்ற படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி மோகன் இந்த திரைப்படத்தை ஒரு ஃபேமிலி என்டர்டைன்மென்ட் கதையாக இயக்க உள்ளார். மேலும் அந்தப் படத்தில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் சவால்களையும் நகைச்சுவையாக இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.