அதிர்ச்சி... நீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல் மயங்கி சரிந்து மாரடைப்பால் மரணம்!
Dinamaalai March 15, 2025 11:48 AM

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் வாதாடிக் கொண்டிருந்த வழக்கறிஞர் ஒருவர், திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை தச்சநல்லூர், மேலக்கரையைச் சேர்ந்தவர் தங்கராஜ் (40). வழக்கறிஞரான இவர் நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்தார்.

உடனடியாக சக வழக்கறிஞர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.