கொடூரம்... கறி சமைக்க மறுத்த மனைவியை அடித்தே கொன்ற கணவன்!
Dinamaalai March 15, 2025 11:48 AM

மட்டன் கறி வாங்கி வந்து, சமைத்து தருமாறு கேட்ட கணவனிடம் சமைத்து தர முடியாது என்று மனைவி கறார் காட்டியதால் அடித்தே மனைவியைக் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம்  மெஹபூபாவில் வசித்து வருபவர் கலாவதி. நேற்று கலாவதியின் கணவர் மட்டன் வாங்கி வந்து சமைத்து தரும்படி கூறினார். அதற்கு கலாவதி என்னால இப்ப செஞ்சு தரமுடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு நீடிக்கவே இதில் கோபமடைந்த கலாவதியின் கணவர் தனது மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்துவிட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து கலாவதியின் தாய் புகார் தெரிவித்துள்ளர். 

இந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலாவதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து   வழக்குப்பதிவு செய்த போலீசார் கலாவதியின் கணவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.