ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைப்பது குறித்து UIDAI மற்றும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் விரைவில் தொழில்நுட்ப ஆலோசனைகளை தொடங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை செயலாளர், ஆதார் தலைமை நிர்வாக அதிகாரி, தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பிறருடன் மத்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்நிலையில், விரைவில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த செயல்முறை தொடர்பாக ஆதார் துறையுடன் கலந்தாலோசித்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.